life-style

கணவர் துரோகம் செய்கிறாரா? மனைவிக்கு சமாளிக்க 8 டிப்ஸ்!!

யார் துரோகம் செய்தாலும் கட்டிய கணவன் துரோகம் செய்வதை எந்தப் பெண்களும் விரும்பமாட்டார்கள். அந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Image credits: freepik

பதற்றம் வேண்டாம், அமைதியாக இருங்கள்

கணவரின் துரோகம் அறிந்ததும் கோபம், சோகம், ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு. இந்த சூழலில் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். கோபத்தில் எடுக்கப்பட்ட முடிவு பெரும்பாலும் தவறானது.

உண்மையை கண்டறியவும்

முதலில் உங்கள் சந்தேகம் சரியானதா என்று உறுதிப்படுத்தாவும். யாரோ சொன்னது உண்மையில்லாமலும் போகலாம். ஆதாரம் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

வெளிப்படையாகப் பேசுங்கள்

மனதளவில் தயாராக இருக்கும்போது கணவருடன் பேசுங்கள். குற்றம்சாட்டாமல், சந்தேகங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தவும். 

முடிவை சிந்தித்து எடுங்கள்

சிலர் உண்மை தெரிந்த பின்னர் கணவருக்கு இன்னொரு வாய்ப்பு கொபார்கள். மற்றவர்கள் பிரிந்து செல்வார்கள். பிரிவது என்பது நீங்கள் எடுக்கும் முடிவு. 

ஆலோசனை செய்யவும்

இருவரும் சேர்ந்து பிரச்சினையை தீர்க்க விரும்பினால், திருமணமான தம்பதிகளுக்கு ஆலோசனை நல்ல வழி. இது உங்கள் இருவரின் உறவையும் மேம்படுத்தும்.

சுயமரியாதை

இந்தக் கடினமான காலங்களில் சுயமரியாதை மிகவும் முக்கியம். உங்களை நீங்களே குறை கூறிக் கொள்ளாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதை உணருங்கள்.

முடிவெடுக்கும் நேரம்

எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சூழலை கையாள உங்களுக்கு அவகாசம் வேண்டும். பிரிய நினைத்தால் மனதளவில் தயாராக இருங்கள்.

சட்ட உதவி தேவை

நீங்கள் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிதி மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பின்னர் நடவடிக்கை எடுங்கள்.

Find Next One