பிஸியான வாழ்க்கை முறையில் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், செலவே இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெற நம் முன்னோர்கள் ஒரு அற்புதமான வழியைச் சொல்லியிருக்கிறார்கள்.
life-style Apr 02 2026
Author: Ramprasath S Image Credits:Getty
Tamil
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு
ஆமாம். அதுதான் பாதங்களைச் சுத்தம் செய்வது. ஆயுர்வேதம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தூங்குவதற்கு முன் கால்களைக் கழுவுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Image credits: Social Media
Tamil
உடல் சூடு குறையும்
தூங்குவதற்கு முன் பாதங்களை குளிர்ந்த நீரில் கழுவினால், உடலின் வெப்பநிலை குறையும். இது மூளைக்கு தூங்குவதற்கான நேரம் என சிக்னல் கொடுத்து, ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல உதவுகிறது.
Image credits: Getty
Tamil
மன அழுத்தத்திலிருந்து விடுதலை
நமது பாதங்களில் பல பிரஷர் பாயின்ட்கள் உள்ளன. பாதங்களில் தண்ணீர் படும்போது, அந்தப் புள்ளிகள் ஆக்டிவ் ஆகி, நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வு மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
Image credits: Getty
Tamil
தனிப்பட்ட சுகாதாரம்
பாதங்களில் பாக்டீரியா மற்றும் வியர்வை நாற்றம் இருக்கும். தூங்கும் முன் கால்களைக் கழுவினால், படுக்கை விரிப்புகள் அழுக்காகாது, மேலும் தோல் தொற்றுகளும் பரவாது.
Image credits: linkedin
Tamil
ரத்த ஓட்டம் சீராகும்
பாதங்களைக் கழுவிய பின் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் மேம்படும். இது கண் பார்வையைத் கூர்மையாக்கவும், உடலில் உள்ள 'வாத' தோஷத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.