கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இது பல நோய்களை நம்மை அண்ட விடாமல் விரட்டி அடிக்கிறது. அதன் பலன்களைப் பற்றி தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
கிவி பழத்தில் 'ஆக்டினிடின்' என்ற சத்து உள்ளது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Image credits: freepik
Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
Image credits: Getty
Tamil
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: freepik
Tamil
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கிவி பழம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
Image credits: social media
Tamil
எலும்புகளைப் பாதுகாக்கும்
கிவி பழத்தில் வைட்டமின் கே உள்ளது. இது கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கும், எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிப்பதற்கும் மிகவும் அவசியம்.
Image credits: Getty
Tamil
பார்வைத் திறனை அதிகரிக்கும்
இதில் உள்ள அதிகப்படியான 'லுடீன்' மற்றும் 'சியாக்சாந்தின்' சத்துக்கள், கண்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பு மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன.
Image credits: Getty
Tamil
உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்
கிவி பழத்தில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம். இதனால், இது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
Image credits: Getty
Tamil
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்
தூங்குவதற்கு முன் கிவி பழம் சாப்பிடுவது, தூக்கத்தின் திறனையும் தரத்தையும் மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.