Tamil

செடிக்கு புத்துயிர் தரும் மாத்திரை

நம்ம வீட்டு செடிகள் சில சமயம் வளர்ச்சி குன்றி காணப்படும். எவ்வளவு உரம் போட்டும் பலன் கிடைக்காத போது, 'டிஸ்பிரின்' அல்லது 'ஆஸ்பிரின்' மாத்திரை செடிகளுக்கு புத்துயிர் கொடுக்கும்.

Tamil

டிஸ்பிரின்ல அப்படி என்ன இருக்கு?

டிஸ்பிரின் மாத்திரையில் 'சாலிசிலிக் அமிலம்' (Salicylic Acid) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது செடிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவற்றை வலிமையாக்குகிறது.
Image credits: Freepik
Tamil

எப்படி பயன்படுத்துவது?

4 லிட்டர் தண்ணீரில் 1-3 டிஸ்பிரின்/ஆஸ்பிரின் மாத்திரைகளை போட்டு முழுமையாக கரையும் வரை தண்ணீரில் நன்கு கலக்கவும். இந்த கரைசலை செடியின் இலைகள் மீது ஸ்ப்ரே செய்யுங்கள்.

Image credits: chat gpt
Tamil

செடியின் வளர்ச்சியை வேகப்படுத்த!

வறட்சி, அதிகப்படியான வெயில், பூச்சி தாக்குதல் போன்ற பிரச்சனைகளால் செடி பாதிக்கப்படும்போது, இந்த சாலிசிலிக் அமிலம் செடியைப் பாதுகாக்கிறது. செடியின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கிறது.

Image credits: Getty
Tamil

சரியான நேரம் எது?

நண்பகல் வெயிலில் இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்த வேண்டாம். காலை அல்லது மாலை வேளையில் தெளிப்பது சிறந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 வாரங்களுக்கு ஒருமுறை இந்த முறையைப் பின்பற்றலாம்.
Image credits: GEMINI AI
Tamil

இதோட நன்மைகள் என்னென்ன?

செடிகள் வேகமாக வளரும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பூச்சித் தொல்லைகள் குறையும். செடிகளில் அதிக பூக்கள் மற்றும் பழங்கள் காய்க்க இது உதவும்.
Image credits: AI Generated

காய்ந்துபோன துளசி செடியும் துளிர்க்கும்; இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

Panchalimedu: சொர்க்கம் போல காட்சியளிக்கும் பாஞ்சாலிமேடு! எங்கு உள்ளது தெரியுமா?

Mood Boosters: 60 நொடியில் உங்கள் மனநிலையை மாற்றும் 10 சூப்பர் டிப்ஸ்!

முதுமை தோற்றம் வராமல் இருக்க, இந்த Home made Face Wash ட்ரை பண்ணுங்க.!