Tamil

க்ளோ தரும் ஹோம்மேட் ஃபேஸ் வாஷ்!

முகம் பளபளப்பாக இருக்க காஸ்ட்லியான ஃபேஸ் வாஷ் அல்லது கிரீம் தேவையில்லை. இந்த ஹோம்மேட் ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்தை பிரைட்டாகவும், தெளிவாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் மாற்றும்.

Tamil

சிறந்த ஃபேஸ் வாஷ் செய்ய தேவையானவை

1. கடலை மாவு – 1 ஸ்பூன்

சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்கும்.

2. அரிசி மாவு – 1 ஸ்பூன்

பளபளப்பான சருமத்தை தரும்.

3. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

இது முகத்தை பிரைட்டாக மாற்றும்.

Image credits: social media
Tamil

மேலும் 3 முக்கிய பொருட்கள்

4. சந்தனப் பொடி – ½ ஸ்பூன்

முகத்திற்கு குளிர்ச்சி தரும்.

5. தயிர் – 1 ஸ்பூன்

இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை சுத்தப்படுத்தும்.

6. ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்

புத்துணர்ச்சி கொடுக்கும்.

Image credits: social media
Tamil

இந்த ஃபேஸ் வாஷ் செய்வது எப்படி?

கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், சந்தனப் பொடி ஆகியவற்றை  தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு ரோஸ் வாட்டர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். உங்கள் ஃபேஸ் வாஷ் ரெடி.

Image credits: instagram
Tamil

முகத்தில் எப்படி அப்ளை செய்வது?

முகத்தை லேசாக ஈரப்படுத்தவும். பிறகு, இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 1-2 நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்தில் 3-4 முறை பயன்படுத்தலாம்.

Image credits: freepic
Tamil

இது ஏன் க்ளோ தருகிறது?

  • அரிசி மாவு – பளபளப்பான சருமத்தை தரும்.
  • தயிர் – சரும நிறத்தை சீராக்கும்.
  • கடலை மாவு – ஆழமாக சுத்தம் செய்யும்.
  • மஞ்சள் – உடனடி பொலிவைத் தரும்.
  • சந்தனம் – மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
Image credits: social media

Gas Stove: கேஸ் ஸ்டவ் தீ கம்மியா எரியுதா? ஸ்டேப்ளர் பின் இருந்தால் போதும்

இந்தியாவில் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் கைதா? சட்டம் சொல்வது என்ன?

சிக்கன், மட்டனை விட மீனை அதிகம் சாப்பிடும் நாடு எது தெரியுமா?

மாசம் ஒருமுறை இந்த பொடியை போடுங்க... உங்க மணி பிளான்ட் சூப்பரா வளரும்!