life-style
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும் மற்றும் எடையும் சுலபமாக குறையும்.
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறையும்.
வாழைப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
வாழைப்பழத்தில் குளுக்கோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை உள்ளதால் இது உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது தசை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே காலை உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மீறினால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.