life-style
எந்த வயதுக்கு மேல் குழந்தைகளை தனியாக தூங்க வைக்கலாம்? என்று பார்க்கலாம்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்குவது பொதுவான நடைமுறை. பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது போல் பெற்றோருடன் சேர்ந்து தூங்குவதும் பொதுவான ஒன்று தான்.
இந்தியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக தூங்குவதை பெரிய பிரச்சனையாக கருதுவதில்லை. மேலும் அது ஆரோக்கியமான நடைமுறையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், பெற்றோருடன் குழந்தைகள் சேர்ந்து ஒன்றாக தூங்குவது என்பது தற்போது விவாதப் பொருளாக மாறி உள்ளது.
குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து தூங்குவது என்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே வலுவான உணர்ச்சிபூர்வமான தொடர்பை வளர்க்கிறது
பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து ஒன்றாக தூங்குவது, குழந்தைகளின் சார்புநிலையை வளர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
8 வயது வயதிற்கு பிறகு குழந்தைகள் பெரியவர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். எனவே 8 வயது முதலே குழந்தைகளை தனியாக தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.