life-style
சமைக்கப்பட்ட புதிய உணவை 90 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் மந்த நிலை ஏற்படும்.
எளிமையான உணவை உட்கொல்லும் பட்சத்தில் 2 முதல் 4 மணி நேரத்தில் உணவு செரிமானமாகிவிடும். உணவில் ரசாயனம் சேரும் பொழுது செரிமானத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
ஒரு வாய் உணவை 24 முறையாவது சவைத்து உண்ண வேண்டும். இப்படி செய்தால் அது விரைவில் செரிமானமாக உதவும்.
சாப்பிட்டு 2 மணிநேரமாவது கழித்தே உறங்க செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதால் தூக்கமின்மை ஏற்படலாம்
உங்களுக்கான தூக்கம் நீங்கள் செய்யும் வேலையை பொறுத்தது. குறைவாக வேலை செய்தால் குறைவான தூக்கம் போதுமானது.
சரியான உணவை உட்கொள்வதன் மூலமும், உங்கள் மனதை மகிழ்ச்சியான நிலையில் வைத்திருப்பதன் மூலமும் நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்
உடலுக்கு தூக்கத்தை விட நிம்மதியே போதுமானது. இரவுகள் நிம்மதியாக இல்லாவிட்டால் உங்கள் காலை மிகவும் மோசமாக இருக்கும். எனவே தூக்கத்தைவிட நிம்மதியே முக்கியமானது.