life-style

உடற்பயிற்சிக்கு பிறகு என்ன செய்யக்கூடாது

Image credits: our own

கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம்

​உடற்பயிற்சி முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த உணவு  உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். ஆனால் அதிக புரோட்டீன் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.

Image credits: our own

ரன்னிங், சைக்கிளிங் கூடாது

ட்ரெட் மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை​உடற்பயிற்சி செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது.

Image credits: our own

தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா?

உடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும்.

Image credits: our own

குளிர்பானங்கள் வேண்டாம்

உடற்பயிற்சி முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக்கூடாது.

Image credits: our own

உடையை மாற்றிவிடுங்கள்

உடற்பயிற்சி முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்படலாம். 
 

Image credits: our own

ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்

ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அவையும் உடல் எடையை அதிகரிக்கக்கூடும். 

Image credits: our own

ஆம்லெட்டுக்கு சாப்பிடக்கூடாது

உடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Image credits: our own
Find Next One