life-style

உங்க இடுப்பை 36 இன்ச் லிருந்து 28 ஆக மாற்ற சூப்பர் டிப்ஸ்!!

Image credits: Getty

கார்டியோ பயிற்சிகள்

ஜாகிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோ பயிற்சிகள் உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கும். தினமும் 30-45 நிமிடங்கள் செய்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து எடை குறையும்

பிளாங்க் மற்றும் அப்ஸ் பயிற்சிகள்

பிளாங்க், க்ரஞ்சஸ், மற்றும் பக்கவாட்டு பிளாங்க் போன்ற அப்ஸ் பயிற்சிகள் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும். தினமும் 3-4 செட் செய்யவும். இது எடையை குறைக்க உதவும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, கோழிக்கறி, மீன், பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் தசைகளை வலுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும். மேலும் எடையை குறைக்ககும்.

கிரீன் டீ மற்றும் மூலிகை பானங்கள்

கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழுப்புக்கு உதவுகிறது. எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்த தண்ணீர் போன்ற டீடாக்ஸ் பானங்களும் நன்மை பயக்கும்.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, வயிறு, இடுப்பு கொழுப்பைக் குறைக்க உதவும். அவற்றுக்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை சாப்பிடவும்.

இடைப்பட்ட விரதம்

இடைப்பட்ட விரதம் உடலை கொழுப்பை எரிக்கும் நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. இது உங்கள் உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

அதிக நீர் அருந்துதல்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

8 மணி நேரம் தூக்கம்

மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் உங்கள் எடை இழப்பு முயற்சிகளை சீர்குலைக்கும். தினமும் 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் பெறுங்கள், மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா செய்யுங்கள்.

1 வாரம் வரை வாழைப்பழம் ஃபிரெஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!

குர்தாவுடன் மீண்டும் வந்த பழைய டிரெண்ட், இதோ உங்களுக்கான 9 டிசைன்!

முடி உதிர்வதற்கு காரணம் தண்ணீர்தானா? இப்படி தடுக்கலாம்!

முன்கூட்டிய நரைக்கு சாப்பிட கூடாத உணவுகள் இவையே..!