life-style
எந்த ஒரு நபருக்கு வேதங்களைப் பற்றிய அறிவு இல்லை என்றால் அவரை ஒருபோதும் உங்களது வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
வேண்டுமென்றே பிறரை காயப்படுத்தி அதற்காக வருத்தப்படாதவர்களை உங்களது வாழ்க்கை மற்றும் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதே.
தங்களுடைய சொந்த நலனுக்காக மட்டுமே உங்களிடம் பழகுபவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல இவர்களிடமிருந்து தூரமாக விலகி இருப்பது தான் நல்லது.
இனிமையான அல்லது தந்திரமான பேச்சால் மனதை கவருபவர்கள் ஆபதானவர்கள். அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
உங்கள் முன் நல்லவராகவும் உங்களது முதுகுக்கு பின் உங்களைப் பற்றி மோசமாக பேசுபவர்கள் நல்லவர்கள் அல்ல. அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
எப்போதுமே எதிர்மறையாக பேசுபவர்கள் மற்றவர்களுக்கு மனதளவில் தீங்கு விளைவிப்பார். எனவே இத்தகையவரிடமிருந்து விலகி இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.