life-style

புருனே சுல்தானுக்கு 7000 கார்கள்; தங்க அரண்மனை!!

Image credits: Instagram

சுல்தான் ஹசனல் போல்கியா

புருனே சுல்தான் ஹசனல் போல்கியா மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

ரூ.41,975 கோடி மதிப்புள்ள கார்கள்

ஹசனல் போல்கியா செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். உலகில்  மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பைக் கொண்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.41,975 கோடி

ரூ.2.5 லட்சம் கோடி சொத்து

ஹசனல் போல்கியாவிடம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 850 கோடி சொத்துக்கள் உள்ளன. இதில் பெரும்பகுதி புருனேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் இருந்து வருகிறது. 

7,000 கார்கள்

சுல்தானிடம் 7,000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. இதில் சுமார் 600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். இதன் மூலம் சுல்தானின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

450 ஃபெராரி கார்கள்

சுல்தானிடம் சுமார் 450 ஃபெராரி மற்றும் 380 பென்ட்லி கார்கள் உள்ளன. போர்ஷே, லம்போர்கினி, மேபேக், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மெக்லாரன் கார்களும் அடங்கும். 

தங்க கார்

சுல்தானிடம் பென்ட்லி டொமினேட்டர் எஸ்யுவி கார் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.671 கோடிக்கு மேல். அவரிடம் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஸ்பர் II உள்ளது.

மகளுக்கு தங்க ரோல்ஸ் ராய்ஸ்

சுல்தானிடம் திறந்த கூரை மற்றும் குடையுடன் கூடிய ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளது. இது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமணத்தின் போது இந்தக் காரை வாங்கினார்.

சுல்தானின் பிரமாண்ட மாளிகை

இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் சுல்தான் வசிக்கிறார். இது இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனையாகும்.

தங்க அலங்காரம்

சுல்தானின் அரண்மனை 22 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, 5 நீச்சல் குளங்கள், 1,700 படுக்கையறைகள், 257 குளியலறைகள், 110 கேரேஜ்கள், மிருகக்காட்சிசாலை, போயிங் 747 விமானமும் உள்ளது.

உடலை இரும்பாக வைத்திருக்கனுமா? இந்த டிரை ஃப்ரூட்டை சாப்பிடுங்கள்!

முகேஷ் அம்பானியே இப்படிதாங்க சாப்பிடறார்!!

இந்தியாவில் 7 முக்கிய விரைவுச் சாலைகள்!

வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?