Author: Asianetnews Tamil Stories Image Credits:instagram
Tamil
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் தினசரி உணவு பழக்க வழக்கங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
Tamil
5 கிலோ எடை குறைப்பு
முகேஷ் அம்பானி தொழிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலுக்கும் கொடுக்கிறார். முகேஷ் அம்பானி சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சியே இல்லாமல் 15 கிலோ வரை எடையை குறைத்தார்.
Tamil
எடை இழப்புக்கான உணவு
எடையைக் குறைக்க அவர் உடற்பயிற்சி செய்யவில்லை. மாறாக கடுமையான டயட் பாலோ செய்தார். இது அவரை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
Tamil
யோகா
முகேஷ் அம்பானி யோகா-தியானத்துடன் நாளை துவங்குகிறார். காலை 5:30 மணிக்கு எழுந்திருக்கும் முகேஷ் அம்பானி யோகா, தியானம், சூரிய நமஸ்காரம் செய்கிறார்.
Tamil
முகேஷ் அம்பானி காலை உணவு
காலை உணவாக தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார். காலை உணவில் இட்லி, சாம்பாருடன் பழச்சாறுகளை விரும்பி சாப்பிடுகிறார்.
Tamil
முகேஷ் அம்பானியின் மதிய உணவு
முகேஷ் அம்பானி வீட்டில் சமைத்த உணவுகளை மதியம் விரும்பி சாப்பிடுகிறார். குஜராத்தி கறி, பருப்பு, சாதம், ராஜ்மா, சப்பாத்தி சாப்பிடுகிறார்.
Tamil
முகேஷ் அம்பானியின் இரவு உணவு
முகேஷ் அம்பானி இரவு உணவில் குஜராத்தி பாணியிலான பருப்பு நிச்சயம் இடம் பெறும். இது தவிர, அவர் காய்கறிகள், சாதம், சூப், சாலட் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறார்.
Tamil
ஜங்க் ஃபுட்
அம்பானிக்கு ஜங்க் ஃபுட் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது தெரு உணவுகளை ரசிக்கவும் தயங்குவதில்லை. தயிர் பட்டர் பூரி, பேல் பூரி இவருக்குப் பிடிக்கும்.
Tamil
விருப்பமான ஸ்நாக்ஸ்
முகேஷ் அம்பானிக்கு சேவ் பூரி பிடிக்கும். அவர் அடிக்கடி தேநீருடன் லேசான சிற்றுண்டியாக இதை சாப்பிட விரும்புகிறார்.
Tamil
முகேஷ் அம்பானி குஜராத்தி உணவு
முகேஷ் அம்பானி அனைத்து வகையான குஜராத்தி உணவுகளையும் விரும்புகிறார். இதில் ஃபாஃப்ரா, பாக்ரி, காக்ரா மற்றும் தோக்லா ஆகியவை அடங்கும்.