வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாயின் 7 அற்புதமான உடல்நலன் நன்மைகள்
ஊறுகாயில் மறைந்திருக்கும் உடல்நல நன்மைகள்
உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் ஊறுகாயைத் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் சிறிதளவு ஊறுகாய் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைத் தரும்.
ஊட்டச்சத்து நிறைந்த ஊறுகாய்
காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாயில் பாஸ்பரஸ், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊறுகாய்
ஊறுகாயை வினிகர் மற்றும் எண்ணெயில் ஊற வைத்து நீண்ட நாட்கள் வைத்திருப்பார்கள். இதனால் ஊறுகாயில் புளிக்க வைக்கப்பட்ட உணவின் பண்புகள் கிடைக்கின்றன. குடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது
ஊறுகாயில் புரோபயாடிக்குகள் உள்ளன. ஊறுகாய் சாப்பிடுவது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்குகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது
சிறிதளவு ஊறுகாய் சாப்பிடுவது வயிற்றை வேகமாக நிரப்புகிறது. இதனால் அடிக்கடி பசி எற்படுவதில்லை. இதன் காரணமாக இன்சுலின் அளவு குறைகிறது. அதே நேரத்தில், ஆற்றல் அளவு பராமரிக்கப்படுகிறது.
செல்களைப் பாதுகாக்கிறது
ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலின் செல்களை சேதப்படுத்துகின்றன. ஊறுகாயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது.
தசைப்பிடிப்பிலிருந்து நிவாரணம்
சில விளையாட்டு வீரர்கள் தசைப்பிடிப்பிலிருந்து நிவாரணம் பெற ஊறுகாய் சாறு குடிப்பார்கள். இது எலக்ட்ரோலைட் பற்றாக்குறையை ஈடுசெய்யும் திறன் கொண்டது.