life-style
நாட்டிலேயே பணக்காரரான முகேஷ் அம்பானியின் தினசரி வாழ்க்கை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
முகேஷ் அம்பானி தொழிலுடன் தனது உடற்தகுதியிலும் கவனம் செலுத்துகிறார். சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யாமலே 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.
உடல் எடையைக் குறைக்க எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை. மாறாக, பிரத்யேகமான டயட்டை கறாராகப் பின்பற்றினார். அதுதான் அவருக்கு உதவியது.
முகேஷ் அம்பானியின் நாள் யோகா-தியானத்துடன் தான் தொடங்குகிறது. காலை 5:30 மணிக்கு எழுந்து யோகா, தியானம், சூரிய நமஸ்காரம் செய்கிறார்.
முகேஷ் அம்பானி காலையில் எளிமையான உணவையே சாப்பிடுகிறார். குறிப்பாக தென்னிந்திய உணவுகளை விரும்புகிறார். பெரும்பாலும் இட்லி-சாம்பாரும் ஜூஸும் சாப்பிடுகிறார்.
மதியம் எளிய இந்திய உணவுகளையே முகேஷ் அம்பானி உட்கொள்கிறார். வீட்டில் சமைத்த குஜராத்தி காரி, பருப்பு, சாதம், ராஜ்மா மற்றும் சப்பாத்தி சாப்பிடுவது தான் பிடிக்கும்.
முகேஷ் அம்பானியின் இரவு உணவில் குஜராத்தி பாணி பருப்பு நிச்சயம் இடம்பெறும். இது தவிர, காய்கறிகள், சாதம் மற்றும் சாலட் ஆகியவற்றையும் சாப்பிடுகிறார்.
அம்பானிக்கு துரித உணவுகள் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது சாலையோர உணவுகளை வரவழைத்துச் சாப்பிடுவார். மும்பையின் ஸ்வாதி ஸ்நாக்ஸ் ஹோட்டல் உணவுகள் அவருக்குப் பிடிக்கும்.
முகேஷ் அம்பானிக்கும் சேவ் பூரி பிடிக்கும். பலமுறை அவர் தேநீருடன் லேசான சிற்றுண்டியாக இதைச் சாப்பிடுகிறார்.
இது தவிர, முகேஷ் அம்பானி அனைத்து வகையான குஜராத்தி உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவார். ஃபாஃப்ரா, பாக்ரி, காக்க்ரா மற்றும் தோக்லா ஆகியவை பிடிக்கும்.