life-style

வேகவைத்த வேர்க்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Image credits: Getty

வேர்க்கடலை

வேர்க்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வருதோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவார்கள். 

Image credits: Freepik

வேகவைத்த வேர்க்கடலை

ஆனால், வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதற்கு நன்றாகவும் இருக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இங்கே.

Image credits: freepik

அதிக சத்து

வேகவைத்த வேர்க்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.

Image credits: Getty

இதயத்திற்கு நல்லது

வேகவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

 

Image credits: Freepik

எடை இழப்புக்கு உதவும்

வேகவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் புரதம், நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் பசியில் இருந்து விலக்கி வைக்கும். டயட் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சிற்றுண்டி.

Image credits: Pinterest

மூளைக்கு நல்லது

வேர்க்கடலையில் ஃபோலேட், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும், இவை ஆரோக்கியமானப்நரம்பு மண்டலத்தை பராமரிப்பு உதவுகின்றது.

 

Image credits: Pixabay

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல சிற்றுண்டியாகும்.

Image credits: Getty
Find Next One