புதிய கற்றாழை ஜெல்லை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
Image credits: stockphoto
தேயிலை மர எண்ணெய்
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புடன் சில துளிகள் தேயிலை மர எண்ணெயை கலந்து பயன்படுத்துங்கள். மேலும், இந்த எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
Image credits: stockphoto
தயிர்
வெறும் தயிரை உங்கள் தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
Image credits: stockphoto
வேப்ப இலை
வேப்ப இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி ஆறவிடவும். பிறகு, அந்த தண்ணீருடன் ஷாம்பு கலந்து தலைக்கு பயன்படுத்தவும்.
Image credits: stockphoto
எலுமிச்சை சாறு
சிறிதளவு எலுமிச்சை சாற்றை உங்கள் உச்சம் தலையில் தடவி மசாஜ் செய்து 5-10 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
Image credits: Freepik
பூண்டு
ஒரு சில பூண்டுகளை நசுக்கி தேனுடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
Image credits: Getty
தேங்காய் எண்ணெய்
இரவு தூங்கும் முன் மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் 30 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு காலையில் ஷாம்பு போட்டு குளிக்கலாம்.