Tamil

செரிமானத்தை சீராக்கும் 8 டிடாக்ஸ் பானங்கள்

செரிமான பிரச்சனைகளை சரிசெய்து, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 8 எளிய டிடாக்ஸ் பானங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Tamil

1. தேன் கலந்த எலுமிச்சை நீர்

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இது செரிமான நொதிகளை தூண்டி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். 

Image credits: Freepik
Tamil

2. வெள்ளரி புதினா டிடாக்ஸ் நீர்

ஒரு ஜக் தண்ணீரில் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் சில புதினா இலைகளை சேர்க்கவும். இதை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். வெள்ளரி உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். 

Image credits: Freepik
Tamil

3. ஆப்பிள் சிடர் வினிகர் டானிக்

வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்,1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். சாப்பிடுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் இதை குடித்தால் செரிமானம் சிறப்பாக நடக்கும்.

Image credits: Freepik
Tamil

4. இஞ்சி எலுமிச்சை டீ

தண்ணீரில் சில துண்டு இஞ்சியை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலக்கவும். இஞ்சி குடலில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும்.

Image credits: Freepik
Tamil

5. கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜெல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். கற்றாழை இயற்கையாகவே மலமிளக்கியாக செயல்படும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றி, வீக்கத்தை குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

6. சோம்பு தண்ணீர்

ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இதை வடிகட்டி குடிக்கவும். சோம்பு வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் வலியை நீக்கும்

Image credits: Freepik
Tamil

7. டிடாக்ஸ் கிரீன் ஸ்மூத்தி

பசலைக்கீரை, வெள்ளரி, பச்சை ஆப்பிள், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து அரைக்கவும். நார்ச்சத்து நிறைந்த இந்த ஸ்மூத்தி குடலை சுத்தப்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

8. மஞ்சள் தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த தண்ணீர் கல்லீரலை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகின்றன.

Image credits: Freepik

எந்த வாசலுக்கு எந்த நிற டோர் மேட் வைத்தால் சிறப்பாக இருக்கும்?

உயரத்தை அதிகரிக்க இந்த உடற்பயிற்சிகளை இன்றே தொடங்குங்கள்

Pure Honey: நீங்கள் சாப்பிடும் தேன் சுத்தமானதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்

மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதம், கெட்ட வாடையா? இதோ சிம்பிள் டிப்ஸ்!