ஸ்நேக் பிளான்ட், மிகக் குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் எளிதாக வளர்க்கக்கூடிய ஒரு செடி. இதை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
life-style May 20 2026
Author: vinoth kumar Image Credits:Getty
Tamil
காற்றை சுத்திகரிக்கும்
காற்றில் உள்ள மாசுகளை நீக்கி, காற்றை சுத்திகரிக்க ஸ்நேக் பிளான்ட் உதவுகிறது. இது நமது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
குறைந்த பராமரிப்பு போதும்
ஸ்நேக் பிளான்ட் செடியை வீட்டிற்குள் வளர்க்க அதிக மெனக்கெடல் தேவையில்லை. இந்தச் செடிக்கு அதிக தண்ணீரோ, அதிக வெளிச்சமோ தேவையில்லை.
Image credits: Getty
Tamil
தண்ணீர் அதிகம் தேவையில்லை
ஸ்நேக் பிளான்ட் செடிக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் குறைவாக இருக்கும் சூழலில்கூட இது நன்றாக வளரும் தன்மை கொண்டது.
Image credits: Getty
Tamil
குறைந்த வெளிச்சம் போதும்
ஸ்நேக் பிளான்ட் செடி வளர்வதற்கு மிதமான வெளிச்சமே போதுமானது. அதனால், அதிக வெளிச்சம் இல்லாத அறைகளில்கூட இதை எளிதாக வளர்க்கலாம்.
Image credits: Getty
Tamil
வீட்டுக்கு அழகான லுக்
ஸ்நேக் பிளான்ட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதை வீட்டில் வைத்தால், வீட்டிற்கு ஒரு தனித்துவமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
Image credits: Getty
Tamil
பூச்சிகளை விரட்டும்
பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் ஸ்நேக் பிளான்ட் செடிக்கு உண்டு. எனவே, இதை வீட்டிற்குள் வளர்ப்பது மிகவும் நல்லது.