சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
health Aug 14 2026
Author: Ganesh A Image Credits:Freepik
Tamil
கீரை வகைகள்
பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற பல்வேறு கீரை வகைகளில் மெக்னீசியம் சத்து அதிகமாக உள்ளது. இது மன அழுத்தத்தைத் தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.
Image credits: Getty
Tamil
நட்ஸ்
பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் கார்டிசோல் அளவைக் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆனால், இதை மிதமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Image credits: Getty
Tamil
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மன அழுத்த ஹார்மோன்களைச் சீராக்கி, பதற்றத்தைக் குறைக்கின்றன.
Image credits: Getty
Tamil
அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது மனநிலையைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
Image credits: pexels
Tamil
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை செல்களில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்து மன அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
Image credits: Getty
Tamil
டீ வகைகள்
கெமோமில், லாவெண்டர் மற்றும் கிரீன் டீ போன்றவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் பண்பு கொண்டவை. இவை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.