Tamil

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 பழக்கங்கள்

ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? இதோ உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய 10 எளிய பழக்கவழக்கங்கள்!

Tamil

1. தூக்கத்திற்கு முன்னுரிமை

தினமும் இரவு 7 முதல் 9 மணி நேரம் தடையின்றி தூங்குங்கள். இது உங்கள் உடலை ரீசார்ஜ் செய்ய உதவும்.

Image credits: Freepik
Tamil

2. கவனித்து சாப்பிடுங்கள்

காய்கறிகள், பழங்கள், புரதம், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, மெதுவாக சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.
Image credits: Freepik
Tamil

3. உடலை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும், மனநிலையை மேம்படுத்தும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா என தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் செய்யுங்கள்.

Image credits: Freepik
Tamil

4. நன்றி உணர்வைப் பழகுங்கள்

உங்களிடம் உள்ள விஷயங்களுக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்குவது, உங்கள் மனநிலையை மாற்றி மகிழ்ச்சியை அதிகரிக்கும். தினமும் உங்களுக்குக் கிடைத்த 3 விஷயங்களை டைரியில் எழுதுங்கள்.
Image credits: Freepik
Tamil

5. உறவுகளைப் பேணுங்கள்

வலுவான சமூக உறவுகள் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுங்கள்.
Image credits: Freepik
Tamil

6. மன அழுத்தத்தைச் சரியாகக் கையாளுங்கள்

ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது டைரி எழுதுவது மனதை அமைதிப்படுத்தும். 'முடியாது' என்று சொல்லக் கற்றுக்கொள்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

7. நிறைய தண்ணீர் குடியுங்கள்

நீர்ச்சத்து குறைபாடு சோர்வு, தலைவலி, மற்றும் கவனக்குறைவுக்கு வழிவகுக்கும். தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

Image credits: Freepik
Tamil

8. ஸ்கிரீன் நேரத்தைக் குறைக்கவும்

அதிகப்படியான ஸ்கிரீன் நேரம், குறிப்பாக சமூக ஊடகங்களில், பதட்டத்தையும் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும். தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

Image credits: Freepik
Tamil

9. தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

புதிய திறமை அல்லது பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்வது மூளையை தூண்டும். தொடர்ந்து கற்பது தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, மனதைக் கூர்மையாகவும் வைத்திருக்கும்.

Image credits: Freepik
Tamil

10. பிறருக்கு உதவுங்கள்

தன்னார்வத் தொண்டு செய்யுங்கள், ஒரு நல்ல நோக்கத்தை ஆதரியுங்கள் அல்லது சிறிய உதவிகளைச் செய்யுங்கள். இந்த எளிய செயல்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.

Image credits: Freepik

Orange Juice : ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இந்த 5 நோய்கள் கிட்ட கூட வராது!

Microwave: மைக்ரோவேவ் ஓவனில் தவறுதலாகக்கூட சூடுபடுத்தக் கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Weight Loss : 21 நாளில் ஈஸியா 7 கிலோ குறைக்கலாம்! உங்களுக்கான டயட் பிளான் இதோ!