health
கர்ப்பிணிகளுக்கு கோடை வெப்பம் நீரிழிப்பு, வெப்ப பிடிப்புகள், வெப்ப பக்கவாதம், சோர்வு ஆகிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதை தடுக்க டிப்ஸ் உள்ளே..
கோடை கால உஷ்ணத்தால் உடல் பாதிக்காமல் இருக்க சருமம் ஈரப்பதமாக இருக்க வேண்டும். வெயிலில் செல்லும் முன்பு சருமத்திற்கு லோஷன், சன்ஸ்கிரீன் போடலாம்.
கர்ப்பிணிகள் அதிகாலை, மாலை ஆகிய நேரங்களில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுக்க வேண்டும். காரசாரம் அதிகம் இல்லாத மிதமான உணவுகளை உண்ணுங்கள்.
மதிய நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே போகக் கூடாது. அதாவது காலை 10 - மதியம் 2 மணி வரைக்கும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடலில் அதிக சூடு இல்லாமல் குளுமையாக இருக்க, 1 நாளைக்கு இரண்டு அல்லது 3 முறை குளிக்கலாம்.
ஹாட் டப்பில் இருக்கும் பழக்கம் உள்ள கர்ப்பிணிகள் அதை தவிர்க்க வேண்டும். இதனால் நீரிழிப்பு, சோர்வு, ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புள்ளது.
உங்களின் சிறுநீர் அடர்த்தியான நிறமாக இருந்தால் உடல் நீரிழிப்பு பிரச்சனையில் உள்ளதாக பொருள். இது உடலை நீரேற்றமாக வைக்க வேண்டும் என்பதன் அறிகுறி.
கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இந்த உடைகள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும். காற்றோட்டமாக இருக்கும்.
உடலை குளிர வைக்கும் வெந்தயம்! தினமும் காலை 1 ஸ்பூன் போதும்!
மருத்துவ குணம் நிறைந்த ஆமணக்கு எண்ணெயின் பயன்கள்...!
ஆயுர்வேதம் சொல்லும் கோடைகால உணவுகள்.. உடல் குளுமைக்கு இது முக்கியம்!
கோடையில் குழந்தைகளை பாதிக்கும் நோய்களும் சிகிச்சையும்!