Tamil

யூரிக் அமிலத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

நமது உடலில் நச்சுப் பொருட்களான யூரிக் ஆசிட்டை இயற்கையாக, வீட்டில் தயாரிக்கக் கூடிய சில ஆரோக்கிய பானங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

Tamil

எலுமிச்சை சாறு

இது யூரிக் அமிலத்தை நடுநிலையாக்க உதவும். வெறும் வயிற்றில் தினமும் இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது உடலில் யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.

Image credits: stockPhoto
Tamil

தர்பூசணி சாறு

தர்பூசணியில் நீர்ச்சத்து, பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்குவித்து உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. 

Image credits: stockPhoto
Tamil

இஞ்சி டீ

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் மூட்டு வலி வீக்கத்தை குறைக்க இஞ்சி டீ குடிப்பது நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தும்.

Image credits: stockPhoto
Tamil

கிரீன் டீ

கிரீன் டீயில் கேட்டசின்கள் அதிகம் உள்ளன. இவை ஆன்டிஆக்சிடண்ட் ஆக செயல்பட்டு யூரிக் அமிலம் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. தினமும் குடிப்பதால் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேறும்.

Image credits: stockPhoto
Tamil

செலரி விதை தண்ணீர்

செலரி விதைகளில் சக்திவாய்ந்த டையூரிடிக் பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. 

Image credits: stockPhoto
Tamil

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதில்  நீர்ச்சத்து மற்றும் காரத்தன்மை இருப்பதால் யூரிக் அமில அளவை இயற்கையாக குறைக்க உதவுகிறது. 

Image credits: stockPhoto

மதிய உணவுக்குப் பின் மோர் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்.!

மாரடைப்பு வராமல் தடுக்க, இந்த 9 வகை மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.!

இதய நோய் ஆபத்தை தடுக்கும் '7' உணவுகள்

முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்