மதிய உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது தாகத்தைத் தணிப்பதற்கு மட்டுமல்ல, இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இதன் அற்புதமான பலன்களை இங்கே பார்க்கலாம்.
மோர் ஒரு இயற்கையான ப்ரோபயாடிக். இதில் உள்ள லாக்டிக் அமிலம், நாம் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. மேலும், இது வயிற்று உப்புசத்தையும் தடுக்கிறது.
வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, மோர் உடலை உள்ளிருந்து குளிர்விக்கிறது. இது உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
மசாலா நிறைந்த உணவைச் சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் (அ) அசிடிட்டி ஏற்படுவது இயல்பு. மோரில் உள்ள கூறுகள் வயிற்றின் உட்புறச் சுவரைக் குளிர்வித்து, அசிடிட்டியை உடனடியாகக் குறைக்கின்றன.
மோரில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படாமல் பாதுகாத்து, நாள் முழுவதும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.
மோரில் கலோரிகளும் கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளன. மதிய உணவுக்குப் பிறகு இதைக் குடிப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கிறது.
இதில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் புரதம் ஏராளமாக உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
சில ஆய்வுகளின்படி, தொடர்ந்து மோர் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.
மோரில் உள்ள பயோஆக்டிவ் புரோட்டீன்கள், உயர் இரத்த அழுத்தத்தைக் (High BP) குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.
அப்புறம் ஏன் தாமதம்? இன்றிலிருந்தே உங்கள் மதிய உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் மோர் குடிக்கும் இந்த ஆரோக்கியமான பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.