Tamil

ஜான்வி கபூருக்கு பிடித்த தேசாய் ரெசிபி செய்வது எப்படி?

Tamil

தேசாய் செய்ய தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய்-10, பூண்டு-8, வேர்க்கடலை–2 தேக்கரண்டி, கடுகு–  தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 1 , தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு

Tamil

மிளகாய் மற்றும் பூண்டை வதக்கவும்

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் மிளகாய், வேர்க்கடலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.இதனால் மிளகாயின் காரம் சற்று குறைந்து தேசாயின் சுவை அதிகரிக்கும்.

Tamil

சற்று கொரகொரப்பாக அரைக்கவும்

மிக்ஸியில் வறுத்த மிளகாய், பூண்டு, வேர்க்கடலையை சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இதை மிகவும் நைசாக அரைக்க வேண்டாம், தேசாய் சற்று கொரகொரப்பாக இருந்தால் நல்ல சுவையுடன் இருக்கும்.

Tamil

தாளிக்கவும்

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்தவுடன், இந்த தாளிப்பை தயாராக உள்ள தேசாயின் மேல் ஊற்றவும்.

Tamil

உப்பு மற்றும் எலுமிச்சை சேர்க்கவும்

இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனால் தேசாயின் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

Tamil

அலங்கரித்து பரிமாறவும்

கொத்தமல்லி இலையால் அலங்கரித்து சூடான பரோட்டா, பக்கோரா அல்லது கேழ்வரகு ரொட்டியுடன் பரிமாறவும்.

தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!

சீதாபழத்தை இவர்கள் சாப்பிடவே கூடாது: ஏன் தெரியுமா?

இப்படி தூங்கினால் முதுகுவலி வருவது கன்பார்ம்!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்த டிப்ஸ்!!