Beauty
தயிரில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாகும்.
தயிரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை சுத்தமாக்கும். இது தவிர வயதாவதைத் தடுக்கும்.
தயிரில் இருக்கும் கூறுகள் சரும பிரச்சனைகளை நீக்கி முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.
தயிரில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க உதவுகிறது.
கண்களுக்கு கீழ் தயிரை தடவி வந்தால் கருவளையம் மறையும் மற்றும் சருமம் இறுக்கமாகும்.
தினமும் தயிரை முகத்திற்கு தடவி வந்தால் சருமத்தை ஈரப்பதமாக்கி, வறண்ட பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து, முகத்தை பளபளப்பாக்கும்.
வெறும் தயிரை முகத்தில் தடவலாம். வேண்டுமானால் அதில் கடலைமாவு, தேன், காபி பொடி போன்றவற்றை கலந்தும் தடவலாம்.