health

தலையணை

நல்ல தூக்கம் பெற தலையணையை கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு தூங்கலாம். இது தவிரவும் அதில் நிறைய நன்மைகள் உள்ளன.  

Image credits: freepik

தசை வலி

தொடைகளுக்கு நடுவில் தலையணையை வைத்து உறங்குவதால் முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதில்லை. இதனால் தசைகளில் பதற்றம் இல்லை. எனவே காலையில் எழும்போது தசை வலி நிவாரணம் கிடைக்கும். 

Image credits: freepik

முதுகு வலி

முதுகுவலியால் நீங்கள் அவதிபட்டால், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்கலாம். இது முதுகுத் தண்டுவடத்தின் அழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு ஓய்வு தருகிறது. 

Image credits: freepik

கர்ப்பிணிகளுக்கு...

கர்ப்ப காலத்தில் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்தபடி, ஒரு பக்கமாக தூங்குவது முதுகுத் தண்டு அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் நல்ல தூக்கமும் கிடைக்கும். 

Image credits: freepik

இரத்த ஓட்டம்

சில நேரங்களில் சில காரணங்களால் தூக்கத்தின் போது இரத்த ஓட்டம் நின்றுவிடும். முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கினால், ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை குறைக்கலாம். 

Image credits: freepik

கால் வலி

முதுகுவலி அல்லது இடுப்பு பிடிப்புகள் இருந்தால், கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குவது நல்லது. 

Image credits: canva

முதுகெலும்பு சீரமைப்பு

கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதால் முதுகுத்தண்டு சீராக இருக்கும். எந்த வலியும் வராது. 

Image credits: canva

சோர்வு நீங்கும்

நாள் முழுவதும் வேலை செய்வதால் ஏற்படுன் சோர்வைப் போக்க உதவும். 

Image credits: canva

தலையணை நன்மைகள்

முதுகு வலி, தசை வலி, சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்குங்கள். 

Image credits: canva
Find Next One