health
எள்ளில் புரதம், நார்ச்சத்து, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், கலோரிகள், மாங்கனிஸ் மற்றும் நிறைவுறா கொழுப்பு போன்றவை உள்ளன.
எள்ளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வெள்ளை அணுக்களை சுறுசுறுப்பாக வைக்கவும் ஊக்குவிக்கும்.
எள்ளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் அது எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.
எள்ளில் நிறைவுறா கொழுப்பு மற்றும் ஒமேகா 6 உள்ளதால், இவை உடலில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
எள் சருமத்தை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைக்க உதவுகிறது. எள் சாப்பிடுவதன் மூலம் சருமத்தின் வறட்சி நீங்கும்.
எள்ளில் இருக்கும் அமினோ அமிலம் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் உடல் பாதிக்கப்படாமல் இருக்க எல்லை ஊறவைத்து சாப்பிட்டால் நல்லது. இது தவிர ஸ்மூத்திகள் அல்லது பழச்சாறுகளில் சேர்க்கலாம்.