வேப்ப இலையில் ஆக்சிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பல சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
வேப்ப இலை பொடியுடன் மஞ்சள் மற்றும் தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சூடான நீரில் கழுவவும். பிறகு மாய்ஸ்ரைசர் பயன்படுத்தவும்.
வேப்ப இலை பொடியுடன் கடலை மாவு, மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி பிறகு குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். பின் மாய்ஸ்ரைசர் பயன்படுத்தவும்.
இந்த ஃபேஸ் பேக் இறந்த சருமத்தை நீக்கும், பருக்களை குறைக்கும் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்றி, சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
வேப்ப இலை பொடியுடன் சிறிதளவு காற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யும். இது கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை சுத்தமாக வைக்கும்.
கோடையில் சருமம் உயிரற்றதாகிவிடும். எனவே இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள். பூஞ்சை தொற்று, பருக்கள் குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
சருமத்தை பளபளப்பாக்கவும், குறைபாடற்ற சருமத்தை பெறவும் இந்த வேப்பிலை ஃபேஸ் பேக் உதவும். இது பருக்கள், தடுப்புகளை குறைத்து சருமத்தை சுத்தமாக மாற்றும்.