Beauty
1 நன்கு பழுத்த வாழைப்பழம் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளுங்கள் அல்லது மிக்ஸியில் தண்ணிர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த வாழைப்பழத்துடன் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து, 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்..
கால்களில் நன்றாக கழுவியப் பின் தயாரித்து வைத்த பேஸ்ட்டை கால்களில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
30 நிமிடங்கள் கழித்து சூடான நீரால் கால்களை கழுவ வேண்டும் பிறகு துணியால் துடைக்கவும்.
கால்களை துடைத்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். செருப்புகள் இல்லாமல் நடக்கக் கூடாது. வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தலாம்