health
தினமும் காலை வெறும் வயிற்றில் கருஞ்சீரகத் நீரை குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும், உடலில் கொழுப்பு உருகத் தொடங்கும். இதன் காரணமாக எடையும் கட்டுக்குள் இருக்கும்.
கருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் வயதாவதைத் தடுக்கும்.
கருஞ்சீரக தண்ணீரில் இரும்புச்சத்து இருப்பதால், இந்த நீரை தினமும் காலை குடித்து வந்தால் ரத்த சோகை பிரச்சனை இருக்காது.
கருஞ்சீரக தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான அமைப்பு மேம்படுத்தப்பட்டு வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.
தினமும் வெறும் வயிற்றில் கருஞ்சீரக தண்ணீரை குடித்து வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் கருஞ்சீரக தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். குறிப்பாக டைப் 2 நீரில் நோயாளிகளுக்கு இது ரொம்பவே நல்லது.
1 கிளாஸ் தண்ணீரில் 1ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, பின் மறுநாள் காலை கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.