health
கோடையில் பலருக்கு மலச்சிக்கல் வருகிறது. அடிக்கடி ஏற்படும் நீரிழப்பால், செரிமானம் மந்தமாகி மலச்சிக்கல் வரும்.
உடலில் சூடு தணியாமல் இருந்தாலும் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் வரும்.
ஒரு நபருக்கு நீண்ட காலமாகவே மலச்சிக்கல் இருந்து வந்தால் அது பைல்ஸ் நோயை ஏற்படுத்தும்.
மலச்சிக்கலை சந்திப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், காலையில் மலம் எளிதில் வெளியேறும். ஆனால் இதை விட எளிய தீர்வு உள்ளது.
உடலுக்கு குளுமை தரும் வெந்தயத்தை, ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வையுங்கள்.
உடலுக்கு குளுமை தரும் வெந்தயத்தை, ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வையுங்கள்.
நன்கு ஊறிய வெந்தயத்தையும் வெந்தய நீரையும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும்.
வெந்தய நீர் குடித்த சில நிமிடங்களில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
சிலருக்கு ஊற வைத்த வெந்தய சுவை பிடிக்காது. அவர்கள் வெந்தய நீரை மட்டும் அருந்தினால் போதும்.
பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள், நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் நாரின்ஜெனின் போன்றவை காணப்படுகின்றன.