Food
நான்ஸ்டிக் பாத்திரங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து இங்கு பார்க்கலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்களில் குறைந்த எண்ணெயில் உணவு தயாராவதோடு பாத்திரத்திலும் ஒட்டாமல் வருவதால் இல்லத்தரசிகள் இதை அதிகம் விரும்புகின்றனர்.
அமெரிக்காவில் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்திய 250 க்கும் மேற்பட்டோர் டெஃப்ளான் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் வெளியேறும் புகையால் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. புகையில் ஆபத்தான ரசாயனம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது
கார்பன் மற்றும் ஃப்ளோரின் கலப்பதால் பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் (PTFE) என்ற வேதிப்பொருள் உருவாகிறது. நான்ஸ்டிக்கில் சமைக்கும் போது அதிக வெப்பநிலையில் இதிலிருந்து புகை வெளியேறுகிறது.
சுவாசத்தின் மூலம் புகை உடலுக்குள் சென்று மக்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு டெஃப்ளான் என்று பெயர்.
டெஃப்ளான் காய்ச்சலின் அறிகுறிகள் சாதாரண காய்ச்சலைப் போன்றது. காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை புண், சோர்வு, தசை வலி, மூச்சுத் திணறல்.
சமையலறையில் நான்ஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக இரும்பு, எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்துமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.