Food

பெண்களின் ஹார்மோன்களை சீராக்கும் 7 சூப்பர் உணவுகள்

ஆளி விதைகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஆளி விதைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்தி PCOS அறிகுறிகளைக் குறைக்கும்.

வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழம் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது, இது ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இது பெண்களின் உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது, இது ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க அவசியம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை பயறு, பச்சை இலைக் காய்கறிகள் மெக்னீசியம் நிறைந்தவை. மன அழுத்தத்தைக் குறைக்கும். கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு உதவும். 

விதைகள் மற்றும் கொட்டைகள்

பாதாம், வால்நட், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகளில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை தைராய்டு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. 

பெர்ரி பழங்கள்

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இவை மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் குறைக்கின்றன.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் PCOS மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்றவற்றுக்கு நன்மை பயக்கும்.

கொழுப்பு மீன்

சால்மன், மத்தி, சார்டின் போன்ற ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன்கள் பெண்களின் உடலில் வீக்கத்தைக் குறைக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை பராமரிக்கின்றன.

Find Next One