Tamil

கீரைச் செடியில் ஒரே பூச்சித் தொல்லையா?

செடி வளர்க்குறதுக்கு முன்னாடி, நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்கணும். 

Tamil

இடைவெளி விட்டு நடுங்கள்

கீரைச் செடிகளை நடும்போது, ஒன்றோடொன்று உரசிக்கொண்டு இல்லாம, கொஞ்சம் இடைவெளி விட்டு நடுங்க. அப்போதான், காத்தும் வெளிச்சமும் நல்லா கிடைக்கும். 

Image credits: Getty
Tamil

தண்ணீர் விடும்போது கவனம்

சாயங்கால நேரத்துல கீரைச் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்திடுங்க. இது பூஞ்சைத் தொற்று அதிகரிக்கக் காரணமாகிடும். காலையில தண்ணீர் ஊற்றுவதுதான் செடிக்கு ரொம்ப நல்லது.

Image credits: Getty
Tamil

வேப்பெண்ணெய்க் கரைசல்

வாரத்துக்கு ஒருமுறை, வேப்பெண்ணெய் மற்றும் சோப்புக் கரைசல் கலவையை இலைகளின் இரண்டு பக்கங்களிலும் தெளிங்க. இது இலைப்பேன், புழுக்கள் போன்றவற்றை விரட்ட உதவும்.

Image credits: Getty
Tamil

மஞ்சள் நிறப் பொறி

வெள்ளை ஈக்கள், இலைப்பேன்கள் போன்றவற்றை கவர்ந்து அழிக்க, தோட்டத்துல அங்கங்கே மஞ்சள் நிறப் பொறிகளை வைங்க. பூச்சிகள் அதில் ஒட்டிக்கொண்டு அழிந்துவிடும்.

Image credits: Getty
Tamil

புகையிலைக் கரைசல்

பூச்சித் தொல்லை ரொம்ப அதிகமா இருந்தா, புகையிலைக் கரைசலைத் தெளிப்பது நல்ல பலன் தரும். இது இலைகளைத் திங்கிற புழுக்களை அழித்துவிடும்.

Image credits: Getty
Tamil

இயற்கை உரங்கள்

ரசாயன உரங்களைத் தவிர்த்து, மாட்டுச் சாணம், எலும்புத் தூள், கடலைப் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துங்க. இது செடியோட இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

பாதிக்கப்பட்ட இலைகளை நீக்குதல்

பூச்சிகள் தாக்கிய இலைகளைப் பார்த்தா, உடனே அதைக் கிள்ளி எடுத்து அழிச்சிடுங்க. இது பூச்சிகள் மற்ற இலைகளுக்குப் பரவுவதை தடுக்கும்.

Image credits: Getty
Tamil

ஊடுபயிர் சாகுபடி

கீரையுடன் தக்காளி அல்லது பச்சை மிளகாய் போன்ற செடிகளை சேர்த்து நட்டால், அது பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க உதவும். இதற்கு ஊடுபயிர் என்று பெயர்.

Image credits: Getty
Tamil

தொடர்ந்து கண்காணிக்கவும்

தினமும் இலைகளின் அடிப்பகுதியைச் சரிபார்த்து, பூச்சி முட்டைகளோ அல்லது சின்னப் புழுக்களோ இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கோங்க. ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Image credits: Getty

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற 7 உலர் பருப்புகள்: ஆரோக்கிய நன்மைகள்

தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுங்க... அதில் இம்புட்டு நன்மைகளா?

Parotta Tips : பூ மாதிரி சாஃப்ட்டா பரோட்டா செய்வது எப்படி?

Heart Health: மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் 7 உணவுகள்!