Food

தூய தேன் v கலப்பட தேன்

நீர் சோதனை

ஒரு டம்ளர் தண்ணீரில் தேனை ஊற்றவும். தேன் நேராக டம்ளரின் அடிப்பகுதியில் சென்று அமர்ந்தால் அது அசலானது. கரைந்தால் அது கலப்படம் செய்யப்பட்டது.

கட்டைவிரல் சோதனை

கட்டைவிரலில் சிறிதளவு தேனை வைக்கவும். தேன் பரவ ஆரம்பித்தால் அது போலியானதாக இருக்கலாம். உண்மையான தேன் கெட்டியாக இருக்கும். விரலில் ஒட்டிக்கொள்ளும், பரவாது.

தீப்பெட்டி குச்சி சோதனை

ஒரு தீப்பெட்டி குச்சியை தேனில் நனைத்து அதில் தீயை பற்ற வைக்கவும். குச்சியில் எளிதில் தீப்பற்றினால், அது உண்மையான தேன். தீப்பற்ற வைப்பது கடினமாக இருந்தால் அது போலியானது.

இறுகும் தேன்

உண்மையான தேன் காலப்போக்கில் குளிர்ந்து இறுகும். தேன் நீண்ட காலமாக திரவமாகவும் மென்மையாகவும் இருந்தால், அது போலியானதாக இருக்கலாம்.

மணம் மற்றும் சுவை

உண்மையான தேனின் மணம் பூக்கள் மற்றும் தாவரங்களின் மணத்தைக் கொண்டது. இதன் சுவையும் இயற்கையானது. அதே சமயம் போலியான தேனில் எந்த மணமும் இருக்காது.

Find Next One