இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
மஞ்சள், ஊதா அல்லது 'காவேரி' போன்ற ஹைப்ரிட் ரகங்கள்ல உங்க பகுதிக்கு ஏற்றதை தேர்ந்தெடுங்க.
பேஷன் ஃப்ரூட் செடி நல்லா வளர, தினமும் குறைஞ்சது 6-8 மணி நேரம் சூரிய ஒளி படுற இடத்தை செலக்ட் பண்ணுங்க.
60 செ.மீ ஆழம், அகலத்துக்கு குழி தோண்டி, அதுல மேல் மண்ணையும், இயற்கை உரத்தையும் போட்டு நிரப்புங்க.
இடம் இல்லைனு கவலைப்படாதீங்க. பெரிய டிரம்கள் அல்லது 25 கிலோ எடை கொண்ட குரோ பேக்குகளில் கூட பேஷன் ஃப்ரூட் வளர்க்கலாம்.
இது ஒரு கொடி வகை செடி. அதனால, இது படர்ந்து வளர ஜி.ஐ வயர் அல்லது நைலான் வலையை வெச்சு ஒரு வலுவான பந்தல் அமைச்சு கொடுங்க.
செடியோட அடிப்பகுதியில எப்பவும் ஈரப்பதம் இருக்கணும். ஆனா, தண்ணீர் தேங்கி நிக்காம பார்த்துக்கோங்க.
மாட்டுச் சாண உரம், எலும்புத் தூள், கடலைப் புண்ணாக்கு இதையெல்லாம் குறிப்பிட்ட இடைவெளியில கொடுத்தா செடி வேகமா வளரும்.
அறுவடை முடிஞ்சதும், காய்ந்த கொடிகளை வெட்டி விடுங்க. இது புதுசா கிளைகள் வரவும், நிறைய பூக்கள் பூக்கவும் உதவும்.
காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும்போது, பழ ஈக்கள் தொல்லையைத் தவிர்க்க ஃபெரமோன் பொறிகள் அல்லது சின்ன கவர்களைப் பயன்படுத்தலாம்.
காய் பிடிப்பது குறைவா இருந்தா, சாயங்கால நேரத்துல பூக்களில் நீங்களே செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்யலாம். இது அதிக மகசூலைக் கொடுக்கும்.
கீரைச் செடியில் ஒரே பூச்சித் தொல்லையா? அதை விரட்ட சூப்பர் டிப்ஸ்!
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற 7 உலர் பருப்புகள்: ஆரோக்கிய நன்மைகள்
தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுங்க... அதில் இம்புட்டு நன்மைகளா?
Parotta Tips : பூ மாதிரி சாஃப்ட்டா பரோட்டா செய்வது எப்படி?