இளநீர் வெறும் தாகம் தணிக்கும் பானம் மட்டுமல்ல, மருத்துவ பொக்கிஷம். இளநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம்.
இளநீரில் கலோரிகள் குறைவு. ஆனால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தையும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களையும் இளநீர் வழங்குகிறது.
இளநீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உணவில் உள்ள நல்ல சத்துக்களை உடல் வேகமாக உறிஞ்சவும் இது துணைபுரிகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இளநீர் ஒரு சிறந்த பானம். இதில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் திறனும் இளநீருக்கு உண்டு.
மன அழுத்தத்தைக் குறைக்க இளநீர் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து மனதை அமைதிப்படுத்த துணைபுரியும்.
தைராய்டு குறைபாட்டை சரிசெய்ய இளநீர் ஒரு சிறந்த தேர்வாகும். தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்க இளநீர் உதவும் என்று கூறப்படுகிறது.
சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்த இளநீர் மிகவும் நல்லது. அதேபோல, சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் இது உதவும்.
Lunch Foods: மதிய உணவில் இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்
நகங்கள் அடிக்கடி உடையுதா? இதோ உங்களுக்கான சூப்பர் ஃபுட்ஸ்!
இரவு 8 மணிக்கு முன் டின்னர்! உடலுக்கு கிடைக்கும் சூப்பர் நன்மைகள்!
Fish: மீன் சாப்பிடும்போது இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!