Tamil

தினமும் கேரட் சாப்பிடுங்க... அதில் எவ்ளோ நன்மைகள் இருக்குனு தெரியுமா?

தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Tamil

கண் பார்வையை மேம்படுத்தும்

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ளது. இதை நம் உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றுகிறது. இது கண் பார்வையைத் தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Social Media
Tamil

நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடும்

கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, உடலில் நோய் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
Image credits: Social media
Tamil

சரும சுருக்கங்களைக் குறைக்கும்

இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும சுருக்கங்களைக் குறைக்கின்றன. மேலும், முகப்பருவை எதிர்த்துப் போராடி, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
Image credits: Getty
Tamil

செரிமானத்தை எளிதாக்கும்

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
Image credits: pinterest
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கேரட்டில் பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
Image credits: pexels
Tamil

உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்

கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலையும் தடுக்கிறது.
Image credits: Getty

Blood Pressure: பி.பி-யை கண்ட்ரோல் செய்ய இந்த 7 உணவுகளை சாப்பிடுங்க!

Healthy Breakfast : 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 10 ஆரோக்கியமான காலை உணவுகள்!

Moringa Chutney : அசைவத்தையே ஓரங்கட்டும் பெங்களூரு ஸ்பெஷல் முருங்கைக்கீரை துவையல்!

தினமும் பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?