இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அடிக்கடி விலை உயரும் காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் இருக்க என்ன செய்யலாம்? அதற்கு சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
தக்காளி
தக்காளியின் காம்பை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் டேப்பை ஒட்டவும். இதனால் தக்காளி விரைவில் கெட்டுப்போகாது, நீண்ட நேரம் புதியதாக இருக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தை செய்தித்தாள் மீது வைத்து, உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். இதனால் வெங்காயம் பல வாரங்கள் புதியதாக இருக்கும், ஈரப்பதம் சேராது.
இஞ்சி
இஞ்சியை மஞ்சள் தண்ணீரில் நனைத்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் சுற்றவும். பின்னர் அதை காற்றுப்புகாத பாத்திரத்தில் வைக்கவும். இப்படிச் செய்தால் இஞ்சி 3 மாதங்கள் வரை புதியதாக இருக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கைச் சேமிக்கும்போது அவற்றுடன் சில ஆப்பிள்களை வைக்கவும். இப்படி வைத்தால் உருளை முளைக்காது. நீண்ட நாள் புதிது போல் இருக்கும்.
பூண்டு
பூண்டை உலர்ந்த டீத்தூள் மற்றும் சிறிது உப்புடன் ஜிப் லாக் பையில் வைக்கவும். இதனால் பூண்டு பல வாரங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.