ஜொலிக்கும் சருமத்தின் ரகசியம்: இந்த சூப்பர் உணவுகளை சாப்பிடுங்கள்!
health-beauty May 05 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
அவோகேடா (Avocado)
இதில் உள்ள வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கின்றன. இது வறண்ட சருமத்தை நீக்கி மென்மையைத் தரும்.
Image credits: freepik
Tamil
நட்ஸ்கள் (Nuts) :
பாதாம், அக்ரூட் மற்றும் ஆளிவிதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, முன்கூட்டியே ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கின்றன.
Image credits: Getty
Tamil
டார்க் சாக்லேட் (Dark Chocolate) :
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு, முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவைத் தருகிறது.
Image credits: Getty
Tamil
சிட்ரஸ் பழங்கள் (Citrus Fruits) :
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C, சருமத்திற்குத் தேவையான கொலாஜனை உற்பத்தி செய்து, கரும்புள்ளிகளை நீக்கி முகத்தைப் பிரகாசமாக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில் (Tomato with olive oil) :
தக்காளியில் உள்ள லைகோபீன் சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆலிவ் ஆயில் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து பளபளப்பை நிலைநிறுத்துகிறது.
Image credits: Getty
Tamil
பெர்ரி பழங்கள் (Berries) :
ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள அதிகப்படியான வைட்டமின் C, சருமத்தின் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை எப்போதும் உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.