Tamil

கோடை வெயிலை சமாளிக்க 7 இயற்கை ஃபேஸ் பேக்குகள்!

Tamil

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:

தயிரின் லாக்டிக் அமிலம், எலுமிச்சையின் வைட்டமின்-சி கருமையை நீக்கி, சருமத்திற்கு உடனடி பொலிவையும் இயற்கை பிளீச்சிங் பலனையும் தருகின்றன.

Image credits: Getty
Tamil

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்ச முல்தானி மெட்டி சிறந்தது. இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்துப் பயன்படுத்துவதால், சருமத் துளைகள் சுத்தமாகி முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது.

Image credits: Getty
Tamil

பப்பாளி மாஸ்க்:

பப்பாளியில் உள்ள 'பப்பேன்' (Papain) என்சைம்கள் இறந்த செல்களை நீக்கி இது வெயிலால் மங்கிய சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய் மற்றும் தேன்:

வெள்ளரிக்காய் சாறு சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தேன் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருகிறது. வெயிலினால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க இது ஒரு சிறந்த வழி

Image credits: Getty
Tamil

தக்காளி சாறு மற்றும் கடலை மாவு:

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். கடலை மாவு சருமத்தைச் சுத்தப்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

கற்றாழை மற்றும் மஞ்சள்:

கற்றாழை சருமத்தை மென்மையாக்குகிறது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் கோடையில் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சந்தனம் மற்றும் குளிர்ந்த பால்:

சந்தனம் சருமத்திற்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதனை குளிர்ந்த பாலுடன் கலந்து பயன்படுத்தும்போது சரும எரிச்சல் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Image credits: Getty

முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி

கூந்தல் வளர்ச்சிக்கு அரிசி நீர் செய்யும் அற்புத நன்மைகள்

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!!