Beauty
முல்தானி மட்டியை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.
முல்தானி மட்டி தினமும் பயன்படுத்தினால் சருமம் வறண்டதாகவும், கரடு முரடாகவும் மாறும். குறிப்பாக உங்களது சருமம் ஏற்கனவே வறண்டு இருந்தால் இன்னும் மோசமாகும்.
உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் முல்தானி மட்டி பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
சிலருக்கு முல்தானி மெட்டி ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் முல்தானி மட்டி பயன்படுத்த வேண்டாம்.
முல்தானி மெட்டியை தினமும் பயன்படுத்தினால், சருமம் மந்தமாகவும், உயிரற்றதாகவும் மாறிவிடும். இதனால் முகம் இயற்கையான பளபளப்பை இழந்து விடும்.
முல்தானி மெட்டியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.