பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!
health-beauty Feb 05 2025
Author: Kalai Selvi Image Credits:pinterest
Tamil
எண்ணெய் மசாஜ்
இரவு தூங்கும் முன் சூடான எண்ணெயால் உங்களது பாதங்களை மசாஜ் செய்தால் வறண்ட சரும மென்மையாக மாறும்.
Image credits: pinterest
Tamil
எப்படி பயன்படுத்துவது?
முதலில் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதை உங்களது பாதங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள்.
Image credits: pinterest
Tamil
கற்றாழை ஜெல்
வறண்ட பாதத்தை மென்மையாக மாற்ற கற்றாழை ஜெல் உதவும். இதில் இருக்கும் பண்புகள் உங்களது பாதத்தை ஈரப்பதமாக வைக்கும்.
Image credits: Freepik
Tamil
எப்படி பயன்படுத்துவது?
தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை உங்களது பாதத்தில் தடவி வந்தால் விரைவிலேயே உங்களது பாதம் மென்மையாக மாறும்.
Image credits: Freepik
Tamil
அரிசி மாவு, தேன்
அரிசி மாவு மற்றும் தேன் உங்களது வறண்ட பாதத்தை மென்மையாக மாற்ற உதவுகிறது.
Image credits: pinterest
Tamil
பயன்படுத்தும் முறை
இதற்கு 1ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் தேன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்ற நன்றாக கலந்து அதை உங்களது பாதத்தில் தடவி மெதுவாக தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்து விடுங்கள்.
Image credits: i stock
Tamil
நெய்
வறண்ட பாதத்தை மென்மையாக மாற்ற நெய் உதவும். இரவு தூங்கும் முன் உங்களது பாதத்தில் நெய் தடவி வந்தால் பாதம் மென்மையாகும் மற்றும் குதிகால் வெடிப்பும் நீங்கும்.