காஷ்மீரி குங்குமப்பூவின் தரம் உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. அதன் இழைகள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளன. மஞ்சள் பகுதிகள் மிகக் குறைவு. இது அதன் தூய்மையின் அடையாளம்.
நிறம், மணம்
இனிமையான நறுமணத்தைக் கொண்டது. மற்ற குங்குமப்பூக்களை விட தனித்துவமான அடர் தங்கம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
மருத்துவ குணங்கள்
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிடிரஸண்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சுவையில் தனித்துவம்
இதன் சுவை லேசான இனிப்பு மற்றும் சிறிது கசப்புடன் இருக்கும். இதில் தனித்துவமான மண் போன்ற தன்மையும் இருக்கும்.
சரும பராமரிப்பு
குங்குமப்பூ சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது. சரும அழகு மேம்பட உதவுகிறது.
கலாச்சார முக்கியத்துவம்
காஷ்மீரி குங்குமப்பூ பல சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது புனிதம் மற்றும் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
விலை உயர்ந்தது
அரிதான காஷ்மீரி குங்கும்ப்பூ குறிப்பிட்ட காலநிலையில்தான் விளையும். இதை சாகுபடி செய்யவும் அதிக உழைப்பு தேவை என்பதால் விலை மிக அதிகம்.