Beauty

ஆலியாவின் மின்னும் சருமம்

ஆரோக்கியமான சருமத்திற்கு

ஆலியா பட் போன்ற பளபளப்பான சருமத்திற்கு இயற்கை முறையில் வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினாலே போதும்.

4 முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

ஆலியாவின் அழகான சருமத்தின் ரகசியம் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான். பளபளப்பான சருமத்தைப் இதை முயற்சி பண்ணி பார்க்கலாம்.

தேன் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி பவுடர், தக்காளி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து கலக்கவும். பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.

முல்தானி மெட்டி மற்றும் சந்தனப் பேக்

ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டியில் அரை டீஸ்பூன் சந்தனப் பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து கலக்கவும்.

குளிர்ந்த நீரில் கழுவவும்

இந்த முல்தானி மெட்டி சந்தன ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி, அது முழுவதுமாக காய்ந்து போகும் வரை விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஆரஞ்சு தோல் முல்தானி மெட்டி

முல்தானி மெட்டியுடன் அரை ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும். காயவிட்டு தண்ணீரில் கழுவவும்.

ரோஸ் வாட்டர் முல்தானி மெட்டி

2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவவும். இது எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.

மன அழுத்தம் சருமத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா?

மழைக்காலத்தில் ஆண்கள் பின்பற்ற வேண்டிய 6 பியூட்டி டிப்ஸ்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமான சருமம் பெற பெஸ்ட் டிப்ஸ் இதோ!

முகம் தங்கம் போல ஜொலிக்க தினமும் இந்த ஜூஸ் குடிங்க..!