உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை பருக்கள், கரும்புள்ளிகளை குறைத்து, முகத்தை பொலிவாக மாற்றும்.
ஒரு உருளைக்கிழங்கிலிருந்து தோலை நீக்கி அதை முகத்தில் தடவி பத்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு தோலை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தை குளிர்வித்து, முகப்பருக்களை படிப்படியாக குறைக்கும். இதனால் சருமம் இயற்கையாகவே பளபளப்பாகும்.
உருளைக்கிழங்கு தோல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைப்பது மட்டுமல்லாமல், சருமத்தின் நிறத்தையும் மாற்றும்.
இரவு தூங்கும் முன் உருளைக்கிழங்கு தோலை முகத்தில் தடவு வேண்டும். இதனால் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை முகத்திற்கு உருளைக்கிழங்கு தோலை பயன்படுத்தலாம். இதன் விளைவு சில நாட்களிலேயே தெரியும்.
உருளைக்கிழங்கு தோலில் இயற்கையான பொருட்கள் உள்ளதால் சருமத்திற்கு எந்தவித பிரச்சனையும் வராது. மேலும் அனைத்து சருமத்திற்கும் இது ஏற்றது.
நேபாளம் பெண்களின் அழகு குறிப்பு என்ன தெரியுமா?
வெயிலுக்கு உச்சந்தலையில் கொப்புளம் வருதா? உடனடி தீர்வு
அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!
தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!