Tamil

வெயிலுக்கு உச்சந்தலையில் கொப்புளம் வருதா? உடனடி தீர்வு

Tamil

வேப்பிலை நீர் குளியல்

வேப்பிலையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்றும். வேப்பிலைகளை கொதிக்க நீரில் போட்டு அந்த நீரில் வாரத்திற்கு 2 முறை குளிக்கவும்.

Image credits: Instagram
Tamil

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் வீக்கத்தை குறைக்க உதவும். கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி அப்படியே வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து குளிக்கவும். 

Image credits: Pinterest
Tamil

தேயிலை மர எண்ணெய்

இது ஒரு இயற்கையான கிருமி நாசினி. உச்சந்தலையில் இதை தடவினால் கொப்புளம் விரைவாக மறையும். தேங்காயுடன் கலந்து தடவ வேண்டும். நேரடியாக பயன்படுத்தக் கூடாது.

Image credits: Getty
Tamil

தலையை பாதுகாக்கவும்

வெயில் காலத்தில் வெளியில் செல்லும்போது தலையை தொப்பி அல்லது துப்பட்டாவால் மூடவும். அதுபோல தலைமுடியை இறுக்கமாக கட்டாதீர்கள்.

Image credits: Pinterest
Tamil

குளிக்கும் முறை

கோடையில் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிக்கவும். இதனால் உச்சந்தலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். கொப்புளம் வராது.

Image credits: Freepik
Tamil

தயிர் மற்றும் மஞ்சள்

தயிர் மற்றும் மஞ்சள் கொண்டு ஹேர் பேக் போடுங்கள். இது உச்சந்தலையை குளிர்விக்க உதவும் மற்றும் கொப்புளம் வருவதை தடுக்கும்.

Image credits: Getty
Tamil

தலைக்கு எண்ணெய் தேய்தல்

கோடையில் ஒட்டும் எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம். காரணம் தலையில் கொப்புளம் வரும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்கள். ஆனால் நீண்ட நேரம் தடவ வேண்டாம்.

Image credits: social media

அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!

தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!

வறண்ட கூந்தலை பட்டு போல மாற்ற தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க..

வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!