கோடை வெப்பத்தால் சருமத்தில் சிவத்தல், வீக்கம் ஏற்படும். மஞ்சள் மற்றும் சந்தனத்தை பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவினால் இந்த பிரச்சனைகள் குறையும்.
மஞ்சள் மற்றும் சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும், கறைகளை நீக்கும், ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கும்.
மஞ்சள் மற்றும் சந்தனம் சருமத்தில் சுருக்கங்களைப் போக்கி இளமையாக வைத்திருக்க உதவும்.
மஞ்சள் மற்றும் சந்தன பேஸ்ட் முகத்தில் இருக்கும் பருக்களை கொஞ்சம் கொஞ்சமாக மறைய செய்யும்.
சந்தனம் குளிர்ச்சி தன்மையுடையது. வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அரிப்பில் இருந்து இது நிவாரணம் அளிக்கும்.
மஞ்சள் மற்றும் சந்தன பொடியை ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல்லுடன் கலந்து பயன்படுத்தலாம்.
தயாரித்துப் பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
பருக்கள் நீக்கும் உருளைக்கிழங்கு தோல்; எப்படி யூஸ் பண்ணனும்?
நேபாளம் பெண்களின் அழகு குறிப்பு என்ன தெரியுமா?
வெயிலுக்கு உச்சந்தலையில் கொப்புளம் வருதா? உடனடி தீர்வு
அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!