Tamil

காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்!

Tamil

கண்மணி - அஸ்வந்த்:

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான கண்மணி மனோகரன் தொகுப்பாளர் அஸ்வந்த்தை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

Image credits: our own
Tamil

சித்து - ஷ்ரேயா:

திருமணம் சீரியலில் நடிக்கும் போது காதலில் விழுந்த இந்த ஜோடி 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Image credits: Instagram
Tamil

பிரிட்டோ - சந்தியா:

தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து பிரபலமான பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு ரீல் ஜோடியாக நடித்து ரியால் ஜோடியாக மாறினர்.

Image credits: Instagram
Tamil

ரேஷ்மா - மதன்:

அபி டைலர் சீரியலில் நடிக்கும் போது காதலிக்க துவங்கிய ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் 2021-ல் திருமணம் செய்து கொண்டனர்.

Image credits: Instagram
Tamil

ஸ்ரித்திகா - ஆரியன்:

நாதஸ்வரம் சீரியல் நடிகையான ஸ்ரித்திகா, ஆரியனுடன் இணைந்து மகாராசி சீரியலில் நடிக்கும் போது... காதலிக்க துவங்கி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Image credits: Instagram
Tamil

வெற்றி வசந்த் - வைஷு:

விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களான இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வில்லை என்றாலும், நட்பு ரீதியாக பழகி பின்னர் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

Image credits: Instagram
Tamil

ஆர்யன் - ஷபானா:

ஆரியன் - ஷபானா இருவருமே இணைந்து நடிக்காமல் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டு கடந்த 2022-ல் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Image credits: Instagram
Tamil

செந்தில் - ஸ்ரீஜா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் தொடரான சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடிக்கும் போது இருவருமே காதலித்து 2014-ல் திருமணம் செய்து கொண்டனர்.

Image credits: Instagram
Tamil

சுரேந்தர் - நிவேதிதா பங்கஜ்:

கணவர் ஆரியனிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிவேதிதாவை, திருமகள் சீரியல் நடிகர் சுரேந்தர் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Image credits: Instagram
Tamil

ஆல்யா - சஞ்சீவ்:

ராஜா ராணி சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள், பின்னர் 2019-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image credits: our own

காதலர் தின ஸ்பெஷல் : OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய காதல் படங்கள்

நடிப்பு வேண்டாம் என முடிவு செய்த டாப் நடிகர்களின் வாரிசுகள்!

விஜய்யை போல் கடற்கரை ஓரத்தில் பூஜா ஹெக்டே கட்டிய சொகுசு பங்களா!

நக்மா முதல் தபு வரை திருமணம் செய்து கொள்ளாத 8 பிரபலங்கள்!